பைடன் தேர்தலில் வெற்றிபெற்றதாக ட்ரம்ப் முதன்முறையாக கூறியுள்ளார். ஆனால், அந்த வெற்றி முறைகேடாகப் பெறப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளிவந்து கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகியும், யார் வெற்றிபெற்றது என்பதில் குழப்பம் நிலவிவந்தது. காரணம், அமெரிக்காவை பொருத்தவரை, வெற்றிபெற்றவர் யார் என்பது அறிவிக்கப்படவேண்டும், அதை தோல்வியடைந்தவர் ஒத்துக்கொண்டு வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். ஆனால் அந்த சூழல் அமெரிக்காவில் நிலவாத காரணத்தினால், யார் வெற்றிபெற்றார் என்ற குழப்பமான சூழல் நிலவிவந்தது.
ட்ரம்ப் தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாததைக் குறித்து அவரது நண்பர்கள் கூறுகையில், ட்ரம்ப் ஒருபோதும் தோல்வியை ஒத்துக்கொள்ள மாட்டார். ஆனால் தேர்தல் முடிவுகளை வேண்டுமானால் ஏற்றுக்கொள்வார் என்று கருத்துகளைக் கூறியிருந்தனர்.
He won because the Election was Rigged. NO VOTE WATCHERS OR OBSERVERS allowed, vote tabulated by a Radical Left privately owned company, Dominion, with a bad reputation & bum equipment that couldn’t even qualify for Texas (which I won by a lot!), the Fake & Silent Media, & more! https://t.co/Exb3C1mAPg — Donald J. Trump (@realDonaldTrump) November 15, 2020
இந்நிலையில், ட்ரம்ப் தனது ட்வீட்டில் பைடன் வெற்றிபெற்றிருக்கிறார், ஆனால் அந்த வெற்றி முறைகேடாகப் பெறப்பட்டது என பதிவிட்டுள்ளார். தவறுதலாக, மோசடியாக பதிவு செய்யப்பட்ட வாக்குகளை வைத்துதான் பைடன் வெற்றிபெற்றதாகவும், மேலும் ஓட்டு எண்ணப்படும்போது எந்தவொரு வாக்காளர்களோ அல்லது பார்வையாளர்களோ அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் டொனால்டு ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்துள்ளதாக பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!