மும்பையில் 2015 ஆம் ஆண்டில் 'லுக் டெஸ்ட்' என்ற பெயரில் ஒரு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 43 வயது நாகேஸ்வர் ராவ் என்ற புகைப்படக்காரருக்கு நீதிமன்றம் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மார்ச் 2, 2015 அன்று அந்த இளம்பெண் தனது தாய் மற்றும் சகோதரருடன் குற்றம் சாட்டப்பட்டவரின் ஸ்டுடியோவுக்கு ஆடிஷனுக்கு சென்றார். அப்போது அந்த புகைப்படக்காரர் சிறுமியின் சில புகைப்படங்களை மட்டும் எடுத்து, மறுநாள் மீண்டும் வரும்படி அழைத்துள்ளார். மறுநாள் அவர் தனக்கு அரைகுறை ஆடைகளை கொடுத்ததாகவும், தன்னுடைய ஆடைகளை சரிசெய்யும் சாக்குப்போக்கில் அவர் தன்னை தகாத முறையில் தொட்டதாகவும் கூறியுள்ளார். நடிப்புத்துறையில் இது சகஜமானவை என்றும் அவர் கூறியுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு, அப்பெண் அழுதுகொண்டே அறையிலிருந்து வெளியே வந்து, தனது குடும்ப உறுப்பினர்களின் கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு வந்தார், அவர்கள் இந்த விஷயத்தை போலீசில் தெரிவித்தனர்.
நடிப்புத் துறையில் இதுபோன்ற விஷயங்கள் பொதுவானவை என்று குற்றம் சாட்டப்பட்டவர் அளித்த பதில் அவரது தொடுதல் தற்செயலானது அல்ல, ஆனால் பாலியல் நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்பட்டது என்பதைக் குறிக்கிறது என்று நீதிமன்றம் கூறியது. போக்ஸோ சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட இவரை நீதிமன்றம் விடுவித்த போதிலும், சம்பவம் நடந்த நேரத்தில் அந்தபெண் மைனர் என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதால், அவர் ஐபிசி கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. விசாரணையின் போது பாதிக்கப்பட்ட இளம்பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டினார். சிறுமியின் சாட்சியம் நம்பகமானதாக உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Loading More post
'தமிழகத்தில் திமுக ஆட்சி; மே.வங்கத்தில் மீண்டும் மம்தா!'- ஏபிபி-சிவோட்டர் கருத்துக்கணிப்பு
“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்" - செல்லூர் ராஜூ
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?