சென்னை: அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்த 348 பேர் மீது வழக்குபதிவு

chennai--Prosecution-of-348-people-for-exploding-firecrackers-beyond-the-allotted-time

சென்னையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 348 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.


Advertisement

image

காற்று மாசு காரணமாக தீபாவளியன்று, காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை, என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த உத்தரவைப் பின்பற்ற வேண்டுமென தமிழக அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தீபாவளியன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 348 பேர் மீது, சென்னை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 348 பேரையும் கைது செய்த அவர்கள் பின்னர் ஜாமினில் விடுவித்தனர். சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 2018 ஆம் ஆண்டு 2,168 பேர் மீதும், 2019 ஆம் ஆண்டு 497 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement