சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு அனுமதியின்றி வெடி பொருட்கள் கடத்திய இருவரை கேரள காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 7,500 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு, வாளையாறு சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து தக்காளி லோடுடன் வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது பாறைகளை உடைக்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மினி லாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு (30), தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (38) ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக சேலத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலுவாவிற்கு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து 35 பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த 7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 7,500 டெட்டனேட்டர்களையும் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்