பழைய சைக்கிள், ஷீ இல்லாமல் பந்தயம்:வைரலான கம்போடிய சிறுவனின் புகைப்படம்

Cambodian-boy-races-barefoot-with-an-old-bicycle--viral-photo-turns-netizens-into-Good-Samaritans

பழைய மிதிவண்டியுடன், ஷீ இல்லாத வெறுங்காலுடன் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்ட கம்பொடிய சிறுவனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதன் காரணமாக அச்சிறுவனுக்கு பலரும் உதவ ஆரம்பித்துள்ளனர்


Advertisement

image

சமூக ஊடகங்களில் ஒருபுறம் எதிர்மறையான பல விசயங்கள் நடந்தாலும், மறுபுறம் ஆக்கப்பூர்மான, ஆரோக்கியமான செயல்களும் நடக்காமல் இல்லை. டெல்லியில் சமீபத்தில் “பாபா கா தாபா” இணையத்தின் மூலமாக வைரலாகி பெரும் கவனம் ஈர்த்தது. தமிழகத்திலும் கஜாபுயல், சென்னை வெள்ளம், தானே போன்ற பேரழிவுகளின்போது சமூகவலைத்தளங்கள் மூலமாகவே பெரும் உதவிகள் கிடைத்தது.


Advertisement

அதுபோலவே சமூக ஊடகங்கள் மூலமாக கம்போடியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. கம்போடிய தலைநகர் புனோம் பென்னில் நடந்த எம்டிபி-2020 சைக்கிள் பந்தயத்தில் பிச் தியாரா என்ற சிறுவன் மிகவேகமாக சைக்கிள் ஓட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான், ஆனால் அப்போது அவன் ஒரு பழைய சைக்கிளுடன், காலில் ஷூ இல்லாமல், ஹெல்மெட் இல்லாமல் அச்சிறுவன் சைக்கிள் ஓட்டுவதை மக்கள் கவனிக்கவில்லை. இந்த சிறுவனின் தந்தை கட்டுமானத் தொழிலாளி, அவனின் தாய்க்கு கடுமையான உடல் நோய் உள்ளது. ஐந்து பேருடன் பிறந்த இச்சிறுவன்தான் இவர் வீட்டின் கடைசி பிள்ளை. வீட்டில் மிகவும் வறுமையில் இருந்தாலும் விளையாட்டு மீதான அன்பின் காரணமாக, இச்சிறுவன் எந்தவித தயக்கமும் இல்லாமல் போட்டியில் பங்கேற்றான்.

image

இவன் பழைய சைக்கிளுடன், ஷீ, ஹெல்மெட் இல்லாமல் போட்டியில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. அதன்பிறகு தியாராவுக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவுக்கரம் நீண்டுவருகிறது,  “கம்போடியா இளைஞர் சங்க”த்தின் தலைவர் மெங் பென்லோக் தியாராவுக்கு ஒரு புதிய பந்தய சைக்கிளை வழங்கியுள்ளார். அவருக்கு இப்போது தேவைப்படுவது மற்ற விளையாட்டு, பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமே.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement