பூந்தமல்லியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு 9 ஆடுகள் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி அடுத்த மேல்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவா இருவரும் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றனர். காலை நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படும் ஆடுகள் அனைத்தும் பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் அந்த பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மேய்ந்துவிட்டு வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.
அதேபோல் இன்று மதியம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மீண்டும் வீடு திரும்புவதற்காக பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே சாலையை கடந்தபோது அந்த வழியே வேகமாக வந்த கார் ஒன்று ஆடுகளின் மீது வேகமாக மோதியதில் ஒன்பது ஆடுகள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போயின.
ம.பி.யில் வேன் திரும்பும்போது விபத்து - 10 பேர் உயிரிழப்பு
இதையடுத்து ஆட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்து ஓடிவந்துள்ளனர். ஆடுகளைக் கொன்றுவிட்டு கார் நிற்காமல் சென்றிருக்கிறது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் அளித்ததின் பேரில் பூந்தமல்லி போலீசார் ஆடுகளை ஏற்றி சாகடித்து விட்டு நிற்காமல் சென்ற காரின் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Loading More post
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!
ஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை - 6 பேரை கைது செய்தது காவல்துறை
'வாங்க, ஒரு கை பார்ப்போம்' - தமிழக வருகையை வீடியோ மூலம் பதிவிட்ட ராகுல் காந்தி!
''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’