மாஸ்டர் படத்தின் டீஸரை அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் திரையரங்கில் விஜய் ரசிகர்களுடன் கண்டு களித்துள்ளனர்.
“மாநகரம்” , “கைதி” படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஷாந்தனு,“கைதி”பட புகழ் அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், “வாத்தி கம்மிங்” பட்டித் தொட்டியெல்லாம் பரவி பட்டையை கிளப்பியது.
#FansFortRohini is back ????? #MasterTeaser at #FansFortRohini #Master #MasterDiwali pic.twitter.com/vDPo4boL6M
— Rohini SilverScreens (@RohiniSilverScr) November 14, 2020Advertisement
படத்தின் டீஸர் குறித்த அப்டேட்டை விஜய ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேட்டு வந்த நிலையில், இன்று படத்தின் டீஸர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது. அதன்படி மாலை 6 மணிக்கு படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. விஜய் ரசிகர்களுக்காக பிரேத்யமாக பல திரையரங்குகளிலும் மாஸ்டர் டீஸர் திரையிடப்பட்டது. அந்த வகையில் சென்னை ரோகினி திரையரங்கில் மாஸ்டர் டீஸர் திரையிடப்பட்ட நிலையில், அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுடன் டீஸரை கண்டுகளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Loading More post
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
திமுகவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் விதிமீறல் - 6 காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; கையெழுத்தானது ஒப்பந்தம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!