விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல மாதங்களாக இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்டு வந்த மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிற்றரசன் என்பவரை செஞ்சி போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி காவல்துறையினர் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் சுப்பிரமணியன், சையத் முகமது அலி, சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் காவலர்கள், விநாயகபுரம் கூட்டு சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது சிற்றரசன் (25) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை பிடித்த போலீசார், அவர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்தை பற்றி விசாரித்த போது சரியான ஆவணங்கள் இல்லாமல் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். அவரை செஞ்சி போலீசார் மேலும் விசாரித்ததில் செஞ்சி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியுள்ளதா கூறினார்.
தற்போது அவரிடம் அவர் ஓட்டி வந்த வாகனம் ஒன்றும் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் இருந்துள்ளது. அந்த 3 இருசக்கர வாகனங்களையும்; பறிமுதல் செய்த செஞ்சி காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Loading More post
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?