நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஜூஸ் ட்ரை பண்ணுங்க..!

Vitamin-C-juice-increase-the-immunity

எப்போதும் உடல் நலத்தில் அக்கறை கொள்ளாமல் வேலை வேலை என ஓடுபவர்களை ’’உடம்ப பத்திரமா பாத்துக்கோங்க’’ எனக்கூறி எச்சரித்திருக்கிறது இந்த 2020ஆம் ஆண்டு. அனைத்து நோய்க்கிருமிகளிடமிருந்தும் தப்பிக்க நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம். மாத்திரை மருந்துகளைவிட ஆரோக்யமான உணவுமுறையை வழக்கப்படுத்திக் கொள்வதால் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.


Advertisement

குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சருமம், முடி மற்றும் நகம் ஆகியவற்றையும் வைட்டமின் சி வலுவாக்குகிறது. வைட்டமின் சி குறைபாட்டால் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்பட்டு, செல்கள் வளர்ச்சியடைவதைத் தடுக்கிறது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.

பொதுவாக சிட்ரஸ் பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் சி நிறைந்திருப்பது நம் அனைவருக்கும் தெரியும். தினமும் ஒரே ஒரு டேஸ்ட்டான ஜூஸை குடிப்பதன்மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.


Advertisement

ஆரஞ்சு, கேரட் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து செய்யப்படும் இந்த ஜூஸில் வைட்டமின் சி தவிர, வைட்டமின் பி6, பீட்டா கரோட்டீன் ஆகியவையும் நிறைந்துள்ளது. இதுதவிர சுத்தமான மல்லித்தழையில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளன.

image

தேவையான பொருட்கள்
தோலுரித்த ஆரஞ்சு - 2
கொத்தமல்லித்தழை - 2 ஈற்று
நறுக்கிய கேரட் - 1
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்


Advertisement

செய்முறை
மிக்ஸியில் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். நன்கு அரைத்தவுடன், வடிகட்டி அப்படியே குடிக்கவும். இதில் சர்க்கரை தனியாக சேர்க்கக்கூடாது. இந்த ஜூஸை தினமும் குடித்துவர கண்டிப்பாக உடலின் நோயெதிர்ப்பு சக்தி விரைவில் அதிகரிக்கும். வேண்டுமானால் வேறு பழங்களை உடன் சேர்த்துக்கொள்ளலாம். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement