சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சவுகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித் சந்த்(74). இவரது மனைவி புல்ஷா பாய்(70). இவர்களின் மகன் ஷீத்தல்(40). இவர்கள் மூவரும் கடந்த நவம்பர் 11ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தனர்.
தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஜீவானம்சம் தரவில்லை எனக்கூறி ஷீத்தலின் மனைவி ஜெயமாலாதான் அவர்களை சுட்டுகொன்று விட்டு தப்பியோடிவிட்டார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே ஷீத்தலிடம் விவாகரத்து பெற்று வாழ்ந்து வரும் ஜெயமாலா, ரூ.5 கோடி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்ததும், இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே மோதல் நிலவி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் புனேவை சேர்ந்த ஜெயமாலாவை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், புனேவில் வைத்து ஜெயமாலா மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Loading More post
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்