இயக்குநர் சுசீந்திரன் ஜெய்யை வைத்து இயக்கியுள்ள ‘ஜெய் 30’ படத்தில் இசையமைப்பாளராக ஜெய் அறிமுகமாகியுள்ளார்.
வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படம் மூலம் தமிழில் முதல் படத்தை துவக்கினார் இயக்குநர் சுசீந்திரன். அடுத்ததாக, நடிகர் கார்த்தியை வைத்து ‘நான் மகான் அல்ல’ விஷ்ணு விஷால் நடிப்பில் ‘ஜீவா’ என் ஹிட் படங்கள் கொடுத்து தமிழின் முன்னணி இயக்குநர் ஆனார். அவர் இயக்கத்தில் கடைசியாக பாண்டிய நாடு படம்தான் வெற்றி பெற்றது. அதன்பிறகு இயக்கிய அத்தனை படங்களும் தோல்வி அடையவே, சுசீந்திரன் தற்போது ஈஸ்வரன் படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.
விஜய்யின் பகவதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜெய், சென்னை 28, வாமனன், சுப்ரமணியபுரம், வடகறி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிப்பில் கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு ’தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படம் வெளியானது. சில வருடங்கள் படங்கள் நடிக்காமல் இருந்த ஜெய் மீண்டும் நடிப்பில் இறங்கியுள்ளதோடு, இப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் திறமையை வெளிப்படுத்தவுள்ளார். ஜெய் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அறிமுகத் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா தயாரிக்கிறார்.
இந்நிலையில், படப்பிடிப்பு முழுவதும் முடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர், இசை வெளியீட்டு விழா, திரைபடம் வெளியாகும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
Loading More post
சென்னை மற்றும் புறநகரில் கடுமையான பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகம் - மருத்துவமனை தகவல்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!