'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தை வாங்கிய இயக்குநர் வெற்றி மாறன்!

kavalthurai-ungal-nanban-movie

சுரேஷ், ரவீனா ரவி நடித்துள்ள ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வாங்கியுள்ளதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.


Advertisement

 கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில்  சந்திரக்குமார் எழுதிய ‘லாக்கப்’ நாவலை மையமாக வைத்து விசாரணை படத்தை உருவாக்கினார் இயக்குநர் வெற்றிமாறன். இப்படம் சிறந்த படத்திற்கான தேசியவிருதை பெற்று பாராட்டுக்களைக் குவித்தது. காவல்துறையினரின் அட்டூழியங்களை அப்பட்டமாய் தோலுரித்து காட்டியது.

image


Advertisement

 அடுத்தடுத்து கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட படங்களை தயாரித்த வெற்றிமாறன், வடச்சென்னை, அசூரன் படங்களையும் இயக்கி வெற்றி கண்டார். இந்நிலையில், காவல்துறை கதைக்களத்தக்க் கொண்ட ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தை வாங்கியுள்ளதால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

image

 காவல்துறை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எப்படி பொதுமக்களை கட்டுப்படுத்துகிறது என்று காவல்துறையின் உண்மை முகத்தைக் காட்டும் இப்படக்குழுவை ஏற்கனவே வெற்றிமாறன் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகமெங்கும் அடுத்த மாதம் தனது  Grassroot film company மூலம் இப்படத்தை வழங்கவுள்ளார், வெற்றிமாறன். 


Advertisement

 பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் தனஞ்செயன் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement