’நாளை அதிகாலை வெளியாகிறது ஈஸ்வரன் டீஸர்’ - சிம்பு

Eeswaran-teaser-releasing-tommorrow

கடந்த ஆண்டு வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்திற்குப்பிறகு சிம்பு நடித்து முடித்துள்ள படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்பு 101 கிலோவிலிருந்து 71 கிலோவாக குறைத்துள்ளார். ஒருமாதமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, பாடல்கள், டப்பிங் என அனைத்து பணிகளும் நிறைவடைந்ததையொட்டி அப்படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசளித்தார் சிம்பு.


Advertisement

image

இந்நிலையில், பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஈஸ்வரன் படத்தின் டீசரை ரசிகர்களுக்கு சிம்பு தீபாவளி பரிசாக நாளை வெளியிடுகிறார். இதுகுறித்து, அவரது ட்விட்டர் பக்கத்தில்


Advertisement

 

“லஷ்மியின் ஆசிர்வாதத்துடன் நாளை அதிகாலை 4.32 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் ஈஸ்வரன் டீசர் வெளியாகிறது” என்று சிம்பு அறிவித்துள்ளார்.


Advertisement

image

பிரம்ம முகூர்த்தம் என்பது சூரியன் உதிப்பதற்கு முன்பு அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிவரை ஆகும். இந்த நேரத்தில்தான், கடவுள்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக சொல்லப்படுகிறது. தீவிர கடவுள் நம்பிக்கை உடையவராக இருப்பதால்தான் சிம்பு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடுகிறார் என்று சொல்லப்படுகிறது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement