சுதா கொங்கராவின் அடுத்தப் படத்தில் கார்த்தி?

Karthi-in-Sudha-Kongras-next-film-

 இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.


Advertisement

வலிமை படத்திற்குப் பிறகு இயக்குநர் சுதா கொங்கரா அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால், வலிமை படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டுதான் முடியும் என்பதால், இடைப்பட்டக் காலத்தில் நடிகர் கார்த்தியின் அடுத்த  படத்தை சுதா கொங்கரா இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

image


Advertisement

’ரெமோ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும்  சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில்தான் வெளியானது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, சுதா கொங்கராவின் இயக்கத்தில் தற்போது வெளியான சூரரைப் போற்று ஹிட் அடித்துள்ளது. ஏற்கனவே, வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி ’பிரியாணி’ படத்தில் நடித்தார். பின்பு சூர்யா, அதே வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்தார்.

 image

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’பசங்க 2’ படத்தில் சூர்யா நடித்தார். அதே இயக்குநரின் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கார்த்தி நடித்தார். இப்போது சூர்யா சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பாண்டிராஜுடன் தான் இணையவிருக்கிறார். இந்நிலையில், விரைவில் சுதா கொங்கரா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கார்த்தி சுதா கொங்கராவின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement