மும்பை இந்தியன்ஸ் ஜாக்கெட் அணிந்தபடி பாகிஸ்தான் சூப்பர் லீகில் இணைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

West-Indies-player-joins-Pakistan-Super-League-wearing-Mumbai-Indians-IPL-Team-jacket-AND-THE-PHOTO-was-surfing-ON-INTERNET

இந்தியாவில் ஐபிஎல் போல பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆண்டு தோறும் நடத்துவது வழக்கம். நடப்பு சீசனுக்கான லீக் போட்டிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்று முடிந்தது. 


Advertisement

image

கொரோனா அச்சுறுத்தலினால் பிளே ஆப் சுற்றுகள் மட்டும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை மறுநாள் முதல் 17 ஆம் தேதி வரை பிளே ஆப் சுற்றை நடத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 


Advertisement

கராச்சி கிங்ஸ், முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஜால்மி, லாகூர் குவாலண்டர்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதில் கராச்சி கிங்ஸ் அணிக்காக வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த 22 வயது பேட்ஸ்மேன் Sherfane Rutherford விளையாட உள்ளார். 

image

அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடருக்கான அணியில் இருந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்நிலையில் அவர் பிஎஸ்எல் தொடரின் பிளே ஆப் சுற்றில் விளையாட பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். 


Advertisement

அவரது வருகையில் கராச்சி கிங்ஸ் அணி புகைப்படுத்துடன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இருப்பினும் அவர் அந்த படத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜாக்கெட்டை அணிந்துள்ளார். 

இந்நிலையில், அவருக்கு கராச்சி கிங்ஸ் அணியின் டிராக் சூட்டை அனுப்பியிருக்க வேண்டும் என ரசிகர் ஒருவர் ட்வீட் போட்டுள்ளார். அதோடு இந்த படம் அதிகளவில் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.  

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement