தன்னுடைய தலைமுறையின் சிறந்த வீரர்கள் இவர்கள் என குறிப்பிட்டு சச்சின் டெண்டுல்கர் மற்றும் லாராவுடன் இருக்கும் புகைப்படத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
உலக கிரிக்கெட் வரலாற்றில் தலைச் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே. இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 708 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் ஷேன் வார்னே.
அவர் தன்னுடைய இன்ஸ்டா பதிவில் சச்சின் மற்றும் லாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து "இந்த இருவரும் என் காலத்தில் தலைச்சிறந்த பேட்ஸ்மேன்கள். நாங்கள் மூவரும் விளையாடிய காலக்கட்டம் நடந்தப் போட்டிகள் நினைவிருக்கிறதா! மீண்டும் பார்க்க விரும்புகிறீர்களா!" என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள லாரா "உங்களுடன் விளையாடிய அனைத்து போட்டிகளும் எனக்கு விருப்பமானதுதான். நீங்கள் வீசும் ஒவ்வொரு பந்தையும் மகிழ்ச்சியுடனே எதிர்கொண்டு விளையாடி இருக்கின்றேன். நம் பக்கத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கருடன் நீங்கள் விளையாடிய போட்டிகளை தேடிக்கொண்டு இருக்கிறேன். இப்போது நாம் மும்பையில் இருப்பதால் உங்கள் இருவரின் சிறந்த போட்டியை தேடிய பின்பு பதிவிடுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!