தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு

School-and-college-reopen-postponed-in-tamilnadu

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Advertisement

9,10,11,12-ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தமிழக அரசு இந்த இந்த முடிவை எடுத்துள்ளது. சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

இதேபோல கல்லூரிகள் திறப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் முதுநிலை இறுதியாண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் 2-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement