'எப்போது வேண்டுமானாலும் எனது விக்கெட்டை விட்டு கொடுப்பேன்' - ரோகித் ஷர்மாவை நெகிழவைத்த சூர்யகுமார் யாதவ்.
துபாயில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், டெல்லி - மும்பை அணிகள் மோதின. போட்டியில் அஸ்வின் ஓவரின் போது, ரோகித் ஷர்மா ரன் அடித்துவிட்டு ஓட்டம் ஓட முயற்சித்தார். ஆனால் பந்தானது கீப்பர் கையில் சென்றுவிட்டதால் சூர்யகுமார் யாதவ் ஓடாமல் இருந்தார். அதன் பின் ரோகித் ஓடிவந்து விட்டதால், வேறு வழியின்றி சூர்யகுமார் ஓடி ரன் அவுட் ஆகினார்.
ரோகித் கவனக்குறைவால் ஓட்டம் ஓடி வந்த போதும், தன்னை விட ரோகித் ஷர்மா களத்தில் இருப்பதே மும்பை அணிக்கு நல்லது என்பதை உணர்ந்த சூர்யகுமார் யாதவ், தனது விக்கெட்டை விட்டுகொடுத்து சென்றது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
போட்டியின் முடிவில் இது குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, சூர்யகுமார் யாதவிற்கு எனது விக்கெட்டை நான் தியாகம் செய்திருக்க வேண்டும். என்னை விட இந்த தொடரில் அவர் தான் சிறப்பாக விளையாடி இருந்தார். அவருக்காக நான் விட்டு கொடுத்திருக்க வேண்டும் என பெருந்தன்மையுடன் பேசியிருந்தார்.
சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டை விட்டுக்கொடுத்த புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட்டு “தன்னலமில்லாத சூர்யா” என்று பதிவிட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சூர்யகுமார் யாதவ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “ரோகித் ஷர்மாவிற்காக எப்போது வேண்டுமானாலும் எனது விக்கெட்டை விட்டுக் கொடுப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!