நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
157 ரன்கள் எடுத்ததால் வெற்றி பெறலாம் என்ற சுலபமான இலக்கை விரட்டியது மும்பை. அந்த அணிக்காக டி காக்கும், ரோகித்தும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 45 ரன்களை சேர்த்தனர். டி காக் விக்கெட்டை இழந்ததால் சூரியகுமார் யாதவ் களத்திற்கு வந்தார்.
ரோகித்தும், சூர்யகுமார் யாதவும் இணைந்து டெல்லி பந்துவீச்சை எதிர்த்து விளையாடினர். அஷ்வின் வீசிய 11வது ஓவரில் பந்தை தட்டிவிட்டு சிங்கிள் எடுக்க முயன்றார் ரோகித். இருப்பினும் அதற்கு நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த சூரியகுமார் யாதவ் ‘நோ’ சொல்லியிருந்தார். அதற்குள் ரோகித் கிரீஸை கடந்துவிட்டார்.
? Such Respect For @surya_14kumar
What he did for @ImRo45 is awesome. ?
.
.#MIvsDC #IPL2020 #SuryakumarYadav #IPLfinal #IPL2020final #RohitSharma #ViratKohli @BCCI @mipaltan @DelhiCapitals #MI #DelhiCapitals pic.twitter.com/WeEBWjLvh2— Mayank Pandey (@MayankP49946217) November 10, 2020
Man with golden heart Suryakumar Yadav sacrificed his wicket for #RohitSharma what a player he is #MIvsDC #Suryakumaryadhav pic.twitter.com/GcIymugowE— S kumar (@IAM_DALE05) November 10, 2020
இரு பேட்ஸ்மேன்களும் ஒரே எண்டில் நிற்க ரோகித்துக்காக க்ரீஸை விட்டு வெளியே சென்று தானாக தனது விக்கெட்டை தியாகம் செய்தார் சூரியகுமார் யாதவ். இந்த செயல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் சூரியகுமார் யாதவ்.
Respect bro ?
Not many would do that which you did @surya_14kumar #IPLfinal #MIvsDC pic.twitter.com/EPzhE5gYCH— MANOJ TIWARY (@tiwarymanoj) November 10, 2020
அவரது செயலை பாராட்டி பலரும் சமூக வலைத்தளங்களில் சூரியகுமாரை புகழ்ந்து வருகின்றனர்.
"The kind of form he was in, I should have sacrificed my wicket, but he did it, so I give a lot of credit to him" - Rohit Sharma, speaking about SKY's run-outhttps://t.co/AQnIEzWvJu #MIvDC #IPL2020 #IPLFinal pic.twitter.com/MPZx8XXcVz— ESPNcricinfo (@ESPNcricinfo) November 10, 2020
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சூர்ய குமார் யாதவ் 16 போட்டிகளில் விளையாடி 480 ரன்களை குவித்தார். அதில் அதிகபட்சமாக 79 ரன்கள் விளாசி இருந்தார். 4 அரைசதம் அடித்துள்ளார். மூன்று முறை நாட் அவுட் ஆகியுள்ளார். இவரது ஆட்டம் பாராட்டும் வகையில் இருந்தது.
Loading More post
மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட சசிகலா: வீடியோ!
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை
"நான் எப்போதும் டெலாவேர் நகரின் மகன்!" - சொந்த ஊரில் உணர்ச்சிவசப்பட்ட பைடன்
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
அசாம்: உறைந்த நிலையில் 1,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் -விசாரணைக்கு உத்தரவு