“எனது பெயர் என்பது எனது அடையாளம், அதனை மாற்றமாட்டேன்” - செலின் கவுண்டர்

my-name-is-my-identity--i-am-not-changing-it-now-celine-gounder

எனது பெயர் என்பது எனது அடையாளம், அதனை மாற்றமாட்டேன் என்று அமெரிக்காவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் இடம்பிடித்துள்ள செலின் கவுண்டர் கூறியுள்ளார்


Advertisement

image

இது தொடர்பாக செலின் கவுண்டர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் “நான் பிறந்த போது 1970 களின் முற்பகுதியில் எனது தந்தை தனது பெயரை கவுண்டர் என்று மாற்றிவிட்டார். என் பெயர் என் பெயர்தான். இந்த வரலாறு சில வேதனையாக இருந்தாலும், அது எனது வரலாறு மற்றும் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். நான் திருமணம் செய்துகொண்டபோது எனது பெயரை மாற்றவில்லை. நான் இப்போது அதை மாற்றமாட்டேன்” என தெரிவித்துள்ளார் மேலும் “பலரும் ஏன் சாதிப்பெயரை பெயருக்கு பின்னால் சேர்த்துள்ளீர்கள் என கேட்கிறார்கள். எனது அப்பா 1960 களிலேயே அமெரிக்காவுக்கு வந்துவிட்டார், அமெரிக்கர்களுக்கு நடராஜன் என்ற பெயரை உச்சரிப்பதற்கு கஷ்டபட்டதால் தனது பெயரை கவுண்டர் என மாற்றினார்” எனவும் தெரிவித்துள்ளார்


Advertisement

 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட டாக்டர் செலின் கவுண்டர் இடம்பிடித்துள்ளார். 43 வயதாகும் செலின் கவுண்டர், அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியாளராக உள்ளார். அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குனராகவும் இருக்கிறார். செலின் கவுண்டரின் தந்தை நடராஜ் கவுண்டர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர். கவுண்டர் என்ற அடையாளத்தை ஏன் பயன்படுத்துகிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்துவந்த நிலையில் இந்த விளக்கத்தை செலின் கவுண்டர் வெளியிட்டுள்ளார்

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement