நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது மும்பை அணி.
ஐபிஎல் போட்டிகள் என்றால் இரண்டு அணிகள் தான் அதிக அளவில் தாக்கம் செலுத்தி வந்துள்ளன. ஒன்று மும்பை இண்டியன்ஸ். மற்றொன்று சென்னை சூப்பர் கிங்ஸ். மகேந்திர சிங் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கும் நிலையில், மும்பை இண்டியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனுடன் ஐந்தாவது முறை கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் தொடக்கம் முதலே எதிரணிகளை வெளுத்து வாங்கி முன்னிலையில் இருந்தது மும்பை இண்டியன்ஸ் அணி. அதேபோல், பிளே ஆஃப் சுற்றிலும் அசால்டாக டெல்லியை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியிலும் டெல்லி அணியை ஊதி தள்ளி எளிதாக ஐபிஎல் கோப்பையை தக்க வைத்தது.
இந்த வெற்றியின் மூலம் சென்னையை அடுத்து தொடர்ச்சியாக அடுத்தடுத்த இரண்டு சீசன்களில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது மும்பை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 மற்றும் 2011 சீசனில் இந்த சாதனையை படைத்துள்ளது.
Champions #MI
Fifth Tym ..... Back To Back Ipl Trophy ..... Looking For Hat-trick Next Year @mipaltan #Champions #IPL2020 #IPL2020final pic.twitter.com/YOeWkDNrEh— Sankar Bhas (@sankar_bhas) November 10, 2020Advertisement
மும்பை 2019 மற்றும் 2020 என தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் கோப்பையை வென்றுள்ளது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்