ரஜினியின் சூப்பர் ஹிட் படமான ’பாட்ஷா’ படத்தை ரசிக்கும் குழந்தையின் வீடியோவை பார்த்த ரஜினி, குழந்தைக்கு வாழ்த்தையும் நன்றியையும் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியானா ’பாட்ஷா’ இன்றும் வசூல் சாதனை செய்த படங்களில் தமிழ் திரையுலகின் பாட்ஷாவாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. தாதா பாட்ஷாவாகவும், ஆட்டோக்காரர் மாணிக்கமாகவும் வில்லனாக நடித்த மார்க் ஆண்டனியை மட்டுமல்ல ஸ்டைலிஷ் நடிப்பில் ரசிகர்களையும் மிரட்டியிருப்பார் ரஜினி.
‘நான் ஒரு தடவை சொன்னா’ என்று ரஜினி பேசிய வசனத்தை, ரஜினி ரசிகர்கள் மட்டும்மல்ல, இப்போதும் தமிழர்கள் ஒவ்வொரு தடவையும் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கலாம். தேவா இசையில் நான் ’ஆட்டோக்காரன், ஸ்டைலு ஸ்டைலுதான், அழகு’ என அத்தனை பாடல்களும் 25 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழகமெங்கும் ஒலித்துக்கொண்டிருப்பவை.
இந்நிலையில், ரஜினி படங்களில் மிகப்பெரிய வெற்றியைக் குவித்த பாட்ஷா படம் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் ஓடிக்கொண்டிருக்கும்போது, ”நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறையக் கொடுப்பான். ஆனா, கைவிட்டுடுவான்” என்று ரஜினி பேசும் வசனத்தை குழந்தை ஒன்று கைத்தட்டி பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறது.
இந்த வீடியோவை குழந்தையின் பெற்றோர் ரஜினி பார்க்கும்படி ரஜினியின் பி.ஆர்.ஓ ரியாஸ் அகமதுவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அடுத்து நடந்ததுதான் மிகப்பெரிய சுவாரஸ்யம். “கடவுளின் ஆசிர்வாதம் குழந்தைக்கு கிடைக்கட்டும். நன்றி” என்று ரஜினி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதால் நெகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளனர், குழந்தையின் பெற்றோர்.
Evlo Generation Vanthaalum Orey Super Star That Is Our Super Star #Rajinikanth Only❤️??? Rajini sir seen my son watching his #Basha Film video with the help of PRO Riyaz Sir Yesterday He Gave Voice Note For My Son He Laughed & Wished My Son That Voice Will Come End Of This video pic.twitter.com/wdnDX4R2wn — Sabbitaroi (@Sabbitaroi2) November 10, 2020
குழந்தை, பாட்ஷா படத்தில் ரஜினியை ரசிக்கும் வீடியோவையும், ரஜினி குழந்தையை வாழ்த்தி நன்றி சொன்னதையும் சமூக வலைதளங்களில் வீடியோவாக பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
Loading More post
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி