பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆர்.ஜே.டி மற்றும் ஜே.டி.யூ கட்சிகளுக்கான முன்னிலை இடங்களில் இழுபறி நீடித்து வருகிறது.
பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பான்மையான இடங்களை ஜே.டி.யூ - பாஜக கூட்டனி கட்சிகள் கைவசம் வைத்துள்ளன. அவர்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் ராஷ்டிர ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்று வருகின்றன.
கட்சிகளுக்கு இடையேயான வாக்கு வித்தியாசமானது சில தொகுதிகளில் 50 லிருந்து 200-க்குள்ளும், பல தொகுதிகளில் 500 லிருந்து 1000 க்குள்ளுமே இருக்கிறது. இதர இடங்களில் இருவேறு கட்சிக்கும் இடையேயான வாக்குவித்தியாசமானது 2000 லிருந்து லிருந்து 5000 க்குள்ளும் இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, கட்சிகளுக்கு இடையேயான முன்னிலை ஏற்ற இறக்கமும் இழிபறி நிலையிலேயே இருக்கிறது.
ஆகையால் ஜே.டி.யூ வெற்றிப்பெற்றால் பெரிய வெற்றியை பதிவு செய்யவும், ஒரு வேளை தோற்றால் ஆர்.ஜே.டி வெற்றியை பதிவு செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. முடிவுகளை பொறுத்திருந்து பார்க்கலாம்
6.45 மணி நிலவரப்படி, ஜே.டி.யு - பா.ஜ.க கூட்டணி 121 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணி 114 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
முன்னிலை நிலவரம்:
ஜே.டி.யு + பா.ஜ.க -123
ஆர்.ஜே.டி + காங்கிரஸ் - 112
எல்.ஜே.பி -0
மற்றவை - 8
(மொத்த தொகுதிகள்: 243/ பெரும்பான்மைக்கு: 122
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!