நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் கணித்திருந்தார்.
ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றி வரும் பீட்டர்சன் இங்கிலாந்தில் இருந்து துபாய் வருவதற்கு முன்னர் அதனை தெரிவித்தும் இருந்தார்.
‘கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவது மன நிறைவாக உள்ளது. ஐபிஎல் தொடரில் பணியாற்றுவது உற்சாகம் கொடுக்கிறது. இந்த முறை டெல்லி கேபிடல்ஸ் அணி கோப்பையை வெல்லும் என நினைக்கிறேன்’ என்று அவர் தெரிவித்திருந்தார்.
அவர் கணிதத்தை போலவே இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் இறுதி போட்டியில் விளையாட உள்ளன.
அதில் டெல்லி வெற்றி பெற்றால் பீட்டர்சனின் கணிப்பு நிஜமாகும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். நடப்பு ஐபிஎல் சீசனில் தொடக்கம் முதலே டெல்லி அணியின் ஆதிக்கம் வலுவாகவே இருந்தது. இருப்பினும், லீக் சுற்றின் இரண்டாம் பாதியில் அந்த அணி பெறும் பின்னடைவை சந்தித்தது. எல்லாவற்றையும் தாண்டி தற்போது இறுதிப்போட்டி வரை வந்துள்ளது. இளம் வீரர்களின் அதிரடி கைகொடுத்தால் தான் டெல்லி அணி கோப்பையை கைப்பற்ற முடியும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
Loading More post
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்