ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ‘யார்க்கர்’ நடராஜன்.
தனது துல்லியமான யார்க்கர் மூலம் ஐபிஎல் தொடரில் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடி வரும் பேட்ஸ்மேன்களை திணறடிக்க செய்திருந்தார் அவர். அதன் மூலம் தேர்வுக் குழுவின் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருந்தார்.
நடராஜன் இந்திய அணியில் தேர்வானதும் அவருக்கு பலரும் தொடர்ந்து வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடராஜனை வாழ்த்தினர். அவரை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
இந்தியாவுக்காக நடராஜன் விளையாட உள்ளது தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் கிரிக்கெட் விளையாடி வரும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புது தெம்பை கொடுத்துள்ளது.
இந்நிலையில் நடராஜனின் ஐபிஎல் அணி கேப்டனான டேவிட் வார்னர் தனது ஸ்டைலில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“இந்த சீசன் எங்களுக்கு அற்புதமாகவே அமைந்தது. ஹைதராபாத் அணிக்காக ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றிகள். தொடரின் முற்பாதியில் தோல்வியை தழுவி இருந்தாலும் பிற்பாதியில் வெற்றி பாதைக்கு திரும்பினோம். இருப்பினும் டெல்லியுடனான போட்டியில் தோற்று இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தோம். அடுத்த சீசனில் பைனல் விளையாடுவதை டார்கெட் செய்வோம்.
"See you in Australia, Nattu"
David Warner has a parting message for #SRH fans and his team-mates
(via: davidwarner31/Instagram)#IPL2020 pic.twitter.com/eU406faJ9D — ESPNcricinfo (@ESPNcricinfo) November 9, 2020
மும்பைக்கும், டெல்லிக்கும் எனது வாழ்த்துகள்.
அதோடு நட்டுவுக்கு (நடராஜன்) எனது வாழ்த்துகள். நாம் ஆஸ்திரேலியாவில் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?