[X] Close

"எதிரணியில் தோனி இல்லை" இறுதிப் போட்டியில் விளையாடும் மும்பை !

Subscribe
MI-facing-the-team-in-finals-without-M-S-Dhoni

ஐபிஎல் வரலாற்றிலேயே மகேந்திர சிங் தோனி இல்லாத எதிரணியுடன் இறுதிப் போட்டியில் மும்பை மோத உள்ளது. சுவாரஸ்யமிக்க முந்தைய சந்திப்புகள் குறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில்.


Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளிடையேயான மோதல் என்பது, கால்பந்து உலகில் பார்சிலோனா, ரியல் மேட்ரிட் அணிகளுக்கிடையேயான ஆக்ரோஷமான போட்டிகளுக்கு நிகரானது. அதன் காரணமாகவே சென்னை, மும்பை அணிகளிடையேயான போட்டிகள் ஐபிஎல்லின் எல் கிளாசிகோ என்று கூறப்படுகிறது. மும்பை அணி இதுவரை கைப்பற்றியுள்ள நான்கு கோப்பைகளில் 3 முறை சென்னை அணியை வீழ்த்தி வசப்படுத்தியவையே. குறிப்பாக மும்பை இண்டியன்ஸ் முன்னேறிய அனைத்து ஃபைனல்களிலும், அதன் எதிரணி மகேந்திர சிங் தோனி அங்கம் வகித்தவை தான்.

image


Advertisement

முதல் 5 ஐபிஎல் சீசன்கள் வரை கோப்பையைக் கட்டியணைப்பது மும்பை அணிக்கு கனவாகவே இருந்தது. 2010 ஆம் ஆண்டு மும்பை அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்த போது, மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியிடம் தான் வீழ்ந்தது. பின்னர் 2013 ஆம் ஆண்டு மீண்டும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது மும்பை அணி. இம்முறையும் எதிரணி தோனி தலைமையிலான சென்னை படையே. இந்த முறை சுதாரித்துக் கொண்ட மும்பை அணி, சிஎஸ்கே-வை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை முத்தமிட்டது. அதன் பிறகு 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு சீசன்களிலும் தோனி தலைமையிலான சென்னை அணியையே இறுதிப் போட்டியாளராக எதிர்கொண்டது மும்பை இண்டியன்ஸ்.

image

சிஎஸ்கேவுடனான இந்த 4 ஃபைனல்களைத் தவிர, 2017 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் முதல் முறையாக சென்னை அல்லாத ஒரு அணியுடன் ஃபைனலைச் சந்தித்தது மும்பை. ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்திய ரைசிங் புனே சூப்பர் ஜயன்ட்ஸ் தான் அந்த அணி. சுவாரஸ்யம் என்னவெனில் அந்த அணியும் மகேந்திர சிங் தோனி அங்கம் வகித்த ஒன்றே. 2016 மற்றும் 2017 ஆகிய இரு ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்ததால் அவ்விரு சீசன்களிலும் புனே அணிக்காக விளையாடி இருந்தார் தோனி.


Advertisement

ஆறாவது முறையாக தற்போது மீண்டும் இறுதிக்குள் நுழைந்துள்ள மும்பை இண்டியன்ஸ், முதல் முறையாக தோனி இடம்பெறாத ஒரு அணியுடன் மோதவுள்ளது. சந்திக்கவுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் வரலாற்றிலேயே முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close