ஐபிஎல்லில் 6-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் அடி எடுத்து வைத்துள்ளது மும்பை இண்டியன்ஸ். அந்த அணி சந்தித்த முந்தைய ஃபைனல்களை திரும்பிப் பார்க்கலாம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு போட்டியைக் கூட வெல்லாத அணி என்ற விமர்சனத்துடன் நடப்பு ஐபிஎல் சீசனில் களமிறங்கியது மும்பை இண்டியன்ஸ். சீசனின் முதல் போட்டியிலுமே அந்த அணி தோல்வியையே சந்தித்தது. அடுத்தடுத்த போட்டிகளில் சுதாரித்துக் கொண்ட மும்பை இண்டியன்ஸ் அடுக்கடுக்காக வெற்றிகளைக் குவித்தது. வெளிப்படுத்திய ஆட்டங்களின் அங்கீகாரமாக, கோப்பையை வெல்லப் போகும் அணியாக கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்டது. கணிப்புகளை கிட்டத்தட்ட சாத்தியமாக்கிவிட்டது மும்பை படை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த மும்பை, சமரசமில்லாத அதிரடிகளின் மூலம் ஆறாவது முறையாக கோப்பையை நெருங்கியுள்ளது.
இதுவரை 8 முறை பிளே ஆஃப்க்குள் நுழைந்துள்ள மும்பை அணி, 2010-ஆம் ஆண்டு சீசனில் தான் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த ஆண்டு சில சொதப்பலான ஆட்டங்களால் சென்னை அணியிடம் கோப்பையைக் கோட்டை விட்டது. அதன் பின்னர் 2013 ஆண்டும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை படையையே இறுதிப் போட்டியில் சந்தித்தது. அப்போட்டியில் லசித் மலிங்கா, ஜான்சன் மற்றும் பொல்லார்டின் மிரட்டலான ஆட்டங்களால் முதல் முறையாக கோப்பையை முத்தமிட்டது.
2015-ஆம் ஆண்டு மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை இண்டியன்ஸ். அப்போதைய இறுதிப்போட்டி எதிராளியும் சென்னை அணி தான். அப்போட்டியில் சிம்மன்ஸ், பொல்லார்டு, ரோகித் சர்மா ஆகியோரின் அசத்தலான ஆட்டங்களால் 202 ரன்களைக் குவித்த மும்பை, சிஎஸ்கே-வை 41 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்து இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. 2016 ஆம் ஆண்டு பிளே ஆஃப் வரை கூட முன்னேறாத மும்பை, 2017 ஆம் ஆண்டு மீண்டும் இறுதிப் போட்டிக்குள் கால்பதித்தது. புனே அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் மகுடம் சூடியது.
2018 ஆம் ஆண்டு லீக் சுற்றுடன் வெளியேறிய மும்பை, 2019 ஆம் ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஆஸ்தான எதிரணியான சென்னையை எதிர்த்து களம் கண்டது. ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு பரபரப்பை பற்ற வைத்த அப்போட்டியில் மீண்டும் ஒரே ரன் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தட்டிச் சென்றது.
6 ஆவது முறையாக மீண்டும் தற்போது இறுதிக்குள் நுழைந்துள்ளது மும்பை. தொடர்ச்சியாக அடுத்தடுத்த சீசன்களில் ஃபைனலுக்குள் நுழைவது இதுவே முதல் முறை. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே அடுத்தடுத்த சீசன்களில் கோப்பையை வசப்படுத்திய அணியாக வலம் வருகிறது. அந்தப் பெருமையை இம்முறை கோப்பையைக் கைப்பற்றி மும்பை அணியும் பெறுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்