இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் இரண்டாவது பாடல் தீபாவளியையொட்டி வெளியாகவிருக்கிறது என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது அறிவித்திருக்கிறார்.
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என குறிப்பிட்ட படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதனாலேயே, ரஜினி ‘பேட்ட’ படத்தில் தன்னை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். அதன்பிறகு, தனுஷ் தனது 40 வது படமான ஜகமே தந்திரம் இயக்கும் வாய்ப்பை கார்த்திக் சுப்புராஜுக்கு கொடுத்தார். இருவரின் கூட்டணிக்கு பட அறிவிப்பு வெளியானதிலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறிக்கிடக்கின்றன.
சஸ்பென்ஸ் த்ரில்லராக வெளியாகவிருக்கும் இப்படத்தின் ‘ரகிட ரகிட ரகிட’ பாடல் தனுஷ் பிறந்த நாளையொட்டி, கடந்த ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி வைரல் ஹிட் அடித்து தமிழர்களின் காலர் டியூன்களாகவும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. விவேக் வரியில் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அவரின் மகள் தீ உள்ளிட்டோர் இப்பாடலை பாடியிருக்கிறார்கள். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு கான்செப்டை மையப்படுத்தி புத்தம் புது காலை படத்தில்’ இடம்பிடித்த குறும்படங்களில் ‘மிராக்கிள்’ என்ற படத்தை இயக்கியும், அதன் வெளியீட்டு பணிகளிலும் பிஸியாக இருந்தார், கார்த்திக் சுப்புராஜ்.
Here's a small Diwali treat from team #JT #Bujji 'Video Song' from 13Th November...
Witness the #SuruliSwag ?#JagameThandhiram #JagameTantram @dhanushkraja @sash041075 @Music_Santhosh @kshreyaas @vivekharshan @Lyricist_Vivek @sherif_choreo @Stylist_Praveen @chakdyn pic.twitter.com/zH1VgM6b2t — karthik subbaraj (@karthiksubbaraj) November 9, 2020
இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “ தீபாவளியையொட்டி வரும் 13 ஆம் தேதி ஜகமே தந்திரம் படத்தின் இரண்டாவது பாடலான ‘புஜ்ஜி(bujji)’ பாடல் தீபாவளி விருந்தாக வெளியாகிறது” என்று தெரிவித்துள்ளதால், நவம்பர் 13 க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!