பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வந்த நபர், 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சண்ட்கபிர் நகரில் 7 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 4 ஆம் தேதி அந்த சிறுமி காணாமல் போனதாகவும், அவரது உடல் சனிக்கிழமை மீட்கப்பட்டதாகவும் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேஷ் சிங் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனையின்போது, அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர் அச்சிறுமியை காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இப்போது கைது செய்யப்பட்ட நபர், ஏற்கெனவே ஒரு சிறுவனை இயற்கைக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தற்போதுதான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் என்றும் பிரிஜேஷ்சிங் கூறினார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி