[X] Close >

ஜோ பைடனின் மூதாதையர்கள் சென்னையில் வாழ்ந்தார்களா? ஆச்சர்ய தகவல்கள்!!

joe-Biden---s-ancestral-Chennai-connect

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பு பற்றி நமக்கு தெரியும். ஆனால் அதிபர் ஜோ பைடனின் மூதாதையருக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்புகள் ஆச்சர்யமளிக்கிறது.


Advertisement

image

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது தாத்தா பி.வி.கோபாலனுடன் சென்னையில் கடற்கரையில் நடந்து செல்லும்போது அவர் நடத்திய கலந்துரையாடல்களைப்பற்றி பெருமிதத்துடன் கூறியுள்ளார். இப்போது அதிபர் ஜோ பைடனுக்கும், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதே நீளமான கடற்கரையில் உலா வந்த மூதாதையர்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.


Advertisement

ஜோ பைடன் முதன்முதலில் தனது இந்திய தொடர்பு பற்றிய செய்தியை 2013 இல் பதிவு செய்தார். அதன் பிறகு கிழக்கிந்திய கம்பெனியில் கேப்டனாக இருந்த அவரது “பெரிய, பெரிய, பெரிய, பெரிய, பெரிய தாத்தா” ஜார்ஜ் பைடன் என்று  விரிவாகக் கூறினார். ஓய்வுக்குப் பிறகு ஜார்ஜ் பிடன் இந்தியாவில் குடியேற முடிவு செய்து ஒரு இந்தியப் பெண்ணை மணந்தார் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் ஜார்ஜ் பைடன் பற்றிய பதிவுகள் எதுவும் இல்லை, ஆனால் கிழக்கிந்திய கம்பெனியின் ஆயுத வணிகக் கப்பல்களின்  கேப்டன்களாக இருந்த இரண்டு பைடன்கள் பற்றிய தகவல்கள் உள்ளது. அந்த பைடன்கள் இருவரும் சகோதரர்கள். கேப் ஆஃப் குட் ஹோப் வழியாக லண்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடினமான பாதையில் இருவரும் இளம் வயதிலேயே தங்கள் முன்னேற்றத்தினை கருதி பயணத்தினை தொடங்கினர். பல கப்பல்களில் கேப்டனாக இருந்த இளைய சகோதரரான வில்லியம் ஹென்றி பைடன் மார்ச் 25, 1843 அன்று 51 வயதில் ரங்கூனில் "அப்போப்ளெக்ஸி" பக்கவாதம் காரணமாக உயிரிழந்தார்.

image


Advertisement

மூத்த சகோதரரான கிறிஸ்டோபர் பைடனும் பல கப்பல்களில் கேப்டனாக பணியாற்றி மெட்ராஸில் (சென்னை) நன்கு அறியப்பட்ட நபராக ஆனார், பின்னர் அவர் இந்தியாவில் குடியேறினார். 1821 ஆம் ஆண்டில் அவர் வேல்ஸ் இளவரசி சார்லோட்டின் கப்பல் கேப்டனாக பதவியேற்றார், மேலும் இங்கிலாந்து மற்றும் கல்கத்தா இடையே நான்கு  பயணங்களை மேற்கொண்டார். 1830 ஆம் ஆண்டில் அவர் இளவரசி சார்லோட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு லண்டனுக்கு அருகிலுள்ள பிளாக்ஹீத்தில் குடியேறினார், அங்கு அவர் பல ஆண்டுகளாக முயற்சித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

பைடன் தனது சொந்த ஊரான டெர்பிஷையரில் ஹாரியட் ஃப்ரீத் எனும் பெண்ணை மணந்தார், 1819 இல் அவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். 41 வயதில் ஓய்வு பெற்றபிறகும் சிட்டகாங்கில் கட்டப்பட்ட தேக்கு கப்பல் விக்டரியை சொந்தமாக வாங்கி,1832 மற்றும் 1834 ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் பம்பாய்க்கு இரண்டு முறை பயணம் செய்தார். இரண்டாவது பயணத்தில் அவர் சகோஸ் தீவுக்கூட்டத்திலுள்ள நெல்சன் தீவைக் கண்டறிந்தார்.

சொந்த கப்பலால் இழப்பு ஏற்பட்டதோ என்னவோ தெரியவில்லை, 1839 ஆம் ஆண்டில் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மார்க்விஸ் கேம்டனில் இந்தியாவுக்கு புறப்பட்டார், மெட்ராஸில் மாஸ்டர் அட்டெண்டண்ட் மற்றும் மரைன் ஸ்டோர் கீப்பராக ஆனார். அவரின் இந்தியாவுக்கான பயணத்தில் அவரது மகள் இறந்துவிட்டார், அவர் கடலில் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

image

மெட்ராஸில் பைடன் தனது 19 ஆண்டுகளில் விடாமுயற்சியால் புகழ் பெற்ற நபராக மாறினார். எடுத்துக்காட்டாக, கடல் பேரழிவுகளைத் தடுக்க கடற்கரையில் விளக்குகள் அமைப்பது போன்ற கடல் பாதுகாப்பிற்கான மேம்பாடுகளை தொடர்ந்து செய்துவந்தார். மேலும் கடற்படையினரின் விதவைகள் மற்றும் அனாதைகளுக்கான தொண்டு நிறுவனங்களையும் நடத்தினார். அவரது மகன் ஹோராஷியோ 1846 இல் மெட்ராஸில் அவருடன் சேர்ந்து மெட்ராஸ் பீரங்கியில் கர்னல் ஆனார். இந்தியாவில் வேறு சில பைடன்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர் கல்கத்தாவில்  லா மார்டினியர் கல்லூரியின் தலைமை ஆசிரியராக இருந்தார்.

1858 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் பைடன் மெட்ராஸில் இறந்தார், அங்குள்ள கதீட்ரலில் ஒரு  நினைவுததகடு உள்ளது. மேலும் தனது நாயான ஹெக்டருடன் அமர்ந்திருக்கும் பைடனின் உருவப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி ஹாரியட் 1880 வரை லண்டனில் வசித்து வந்தார். அவரது சில ஆவணங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன, மேலும்  அவர் தனது இந்திய மனைவியைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை, ஆனால் ஜோ பைடன் சொல்லும் தனது மூதாதையராக, கிறிஸ்டோபர் பைடன் இருக்கவே பெரும்பாலும் வாய்ப்பு உள்ளது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

courtesy - Gateway house

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close