துப்பாக்கியுடன் அபாயகரமான செல்ஃபி ஆசை... இளைஞரின் மார்பில் பாய்ந்த தோட்டா!

22-year-old-youth-shoots-himself-dead-while-posing-with-gun-for-selfie-in-Gr-Noida

உத்தரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் நேற்று துப்பாக்கியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது 22 வயது இளைஞர் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.


Advertisement

image

உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தில், 22 வயதான இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது தவறுதலாக  துப்பாக்கியை அழுத்தி மார்பில் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார்.


Advertisement

உயிரிழந்த இளைஞர் தாரம்புரா கிராமத்தில் வசிக்கும் சவுரப் மாவி என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரும் அவரது நண்பரும் நகுல் சர்மாவும், நண்பரின் திருமணத்திற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாவி காரில் அமர்ந்தபடி துப்பாக்கியை எடுத்து செல்ஃபிக்கு போஸ் கொடுக்கத் தொடங்கினார், அப்போது தவறுதலாக மார்பில் சுட்டுக் கொண்டார். நகுல் சர்மா உடனடியாக அவரை ஷார்தா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

விளையாட்டாக செய்த சம்பவத்தால் உயிரிழந்த இளைஞரின் செயல் அப்பகுதியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement