உத்தரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் நேற்று துப்பாக்கியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது 22 வயது இளைஞர் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.
உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தில், 22 வயதான இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது தவறுதலாக துப்பாக்கியை அழுத்தி மார்பில் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞர் தாரம்புரா கிராமத்தில் வசிக்கும் சவுரப் மாவி என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரும் அவரது நண்பரும் நகுல் சர்மாவும், நண்பரின் திருமணத்திற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாவி காரில் அமர்ந்தபடி துப்பாக்கியை எடுத்து செல்ஃபிக்கு போஸ் கொடுக்கத் தொடங்கினார், அப்போது தவறுதலாக மார்பில் சுட்டுக் கொண்டார். நகுல் சர்மா உடனடியாக அவரை ஷார்தா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
விளையாட்டாக செய்த சம்பவத்தால் உயிரிழந்த இளைஞரின் செயல் அப்பகுதியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
Loading More post
பாஜகவில் இணைந்த புதுவை முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் அமித்ஷாவுடன் சந்திப்பு
கங்குலிக்கு இரண்டாவது முறையாக ஆஞ்சியோ சிகிச்சை!
"சசிகலா பூரண குணமடைய வேண்டும்" - ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப்
குடியரசு தின அணிவகுப்பு: உ.பி.-யின் ராமர் கோயில் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு!
பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த மாரி செல்வராஜ் - அதிகாரபூர்வ அறிவிப்பு
'முன் எப்போதும் இல்லாத' பட்ஜெட் 2021-ல் சாமானிய மக்களின் தேவைகள் என்னென்ன?!
திரையும் தேர்தலும் 3 - அண்ணா எழுத்தில் 'வேலைக்காரி'... புதுப்பாதை தொடங்கிய புள்ளி!
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?