ஐபிஎல்லின் தொடக்கத்தில் யாரும் எங்களை பற்றி பேசவில்லை. ஆனால் இப்போது கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருக்கிறோம் என்று ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது இறுதிப் போட்டியாளரை தீர்மானிக்கவுள்ள QUALIFIER TWO போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தப் போட்டி குறித்து பேசிய டேவிட் வார்னர் "நாங்கள் எல்லாம் ஓர் அணியில் இருக்கிறோம். நாங்கள் வெற்றிப் பெறுவதற்காக இருக்கிறோம். நாங்கள் முதலில் சிறிய அடியை எடுத்து வைத்தோம், ஆனால் இப்போது கோப்பையை குறி வைத்து இருக்கிறோம். அணியில் இருக்கும் வீரர்கள் அவரவர் பொறுப்புடன் விளையாடி வருகின்றனர். ஐபிஎல் தொடக்கத்தில் யாரும் பெரிதாக எங்களைப் பற்றி பேசவில்லை. ஆனால் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இப்போது இருக்கிறோம்" என்றார்.
மேலும் பேசிய அவர் "ஆனால் எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. எங்கள் அணியில் பயிற்சியாளர் முதல் வீரர்கள் அனைவரும் அமைதியான மனநிலையிலேயே இருக்கிறோம். கேப்டனாகிய எனக்கும் எந்தவித அழுத்தமும் இல்லை. ஆனால் ஐபிஎல் கோப்பையை வெல்ல தீவிரமாகவே இருக்கிறோம். அதற்காக எங்களுடைய முழு திறனையும் வெளிப்படுத்துவோம்" என்றார் டேவிட் வார்னர்.
Loading More post
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
“எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பை அரசுகள் ஒருங்கிணைக்க வேண்டும்”- சக்தி காந்த தாஸ்
பெண் எஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?