"பீகாரில் யாருக்கும் பெரும்பான்மையில்லை" தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு !

No-majority-for-any-alliance-in-Bihar-exit-poll-results-out

பீகாரில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என டைம்ஸ் நவ் தெரிவித்திருக்கிறது.


Advertisement

பீகாரில் மொத்தம் 243 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கிறது. இதற்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது. அதில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிய வந்துள்ளது.

image


Advertisement

இதில் நிதிஷ் குமார் - பாஜக கூட்டணிக்கு 91 முதல் 117 இடங்கள் கிடைக்கும் என்றும் லாலு பிரசாத் - காங்கிரஸ் கூட்டணிக்கு 118 முதல் 138 இடங்களை கிடைக்கும் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பீகாரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவை அமையவே வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement