ஆர்சிபி அணியின் கேப்டன்சி பொறுப்பை கோலி துறப்பதற்கு சரியான நேரம் இதுதான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் எம்பியுமான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது பெங்களூர். இதனால் ஐபிஎல் தொடரிலிருந்து பெங்களூர் வெளியேறியது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் காம்பீர் ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளத்துக்கு பேசியுள்ளார் அதில் "கோலியின் 100 சதவித நம்பக்தன்மை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. 8 ஆண்டுகளாக பெங்களூருக்கு கேப்டனாக இருக்கிறார். ஆனால் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை" என்றார் அவர்.
மேலும் "வேறு எந்த அணியிலும் இதுபோல இல்லை. 8 ஆண்டுகள் என்பது சாதாரணம் இல்லை. இத்தனை ஆண்டுகாலம் அணியிலிருந்தும் கோப்பையை வெல்லவில்லை ஆனாலும் கேப்டனாக தொடர்கிறார். இது விந்தையாக இருக்கிறது. இதிலிருந்து கோலியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது. நான் கோலிக்கு எதிராக எதுவும் பேசவில்லை. ஆனால் கோலியே முன் வந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும். அதுதான் நேர்மையானதாக இருக்கும்" என்றார் கோலி.
தொடர்ந்து பேசிய கவுதம் காம்பீர் "உதாரணத்துக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் இரண்டு ஆண்டுகாலம் இருந்தார். ஆனால் என்ன நடந்தது. அவரால் சாதிக்க முடியவில்லை. கேப்டன் பொறுப்பில் இருந்து தூக்கப்பட்டார். இதில் நம்மால் தோனி, ரோகித் சர்மாவை சேர்க்க முடியாது. ஏனென்றால் அவர்கள் சாதித்துகாட்டிவிட்டார்கள். உதாரணத்துக்கு ரோகிச் சர்மா ஜொலிக்கவில்லை என்றால் அவரை மும்பை அணி எப்போதே அணியிலிருந்து நீக்கியிருக்கும்" என்றார்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!