கர்நாடாகாவில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தனது நிர்வாண படங்கள் அனுப்பிய சைக்கோ முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடாகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள சல்லகேரில் வசிக்கும் 54 வயதான ஓ ராமகிருஷ்ணா என்பவர் கடந்த ஆறு மாதக் காலத்தில் 120 பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தனது நிர்வாண படங்களை அனுப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு, சல்லகேரில் வசிப்பவர்கள் தங்களுக்கு தெரியாத எண்ணிலிருந்து நிர்வாண புகைப்படங்கள் கிடைத்ததாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ஓ ராமகிருஷ்ணாவைத் தேடத் தொடங்கினர். “அவரது தொலைபேசி சிறிது நேரம் அணைக்கப்பட்டது. ஆனால் நாங்கள் அவரது மொபைல் தொலைபேசியைக் கண்காணித்தோம், வெள்ளிக்கிழமை, சல்லகேரில் உள்ள அவரது வீட்டில் இருந்து அவரை கைது செய்தோம்” என்று சல்லகேர் போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையில், ராமகிருஷ்ணா படங்களை அனுப்பியதாக ஒப்புக்கொண்டார். அவர் குத்துமதிப்பாக தொலைபேசி எண்களை டயல் செய்வார் என்றும் ரிங்க்டோன் இருந்தால் அந்த எண்ணிற்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
"சில பெண்கள் களங்கத்திற்கு பயந்து இதைப் பற்றி வெளியில் யாரிடமும் சொல்ல மிகவும் பயந்தார்கள். பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர் போலீசில் தகவல் சொன்னார். சில ஆண்களும் புகார் செய்தனர் ”என்று போலீசார் தெரிவித்தனர்.
ஓ ராமகிருஷ்ணாவை கைது செய்த போலீசார் அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சித்ரதுர்காவில் உள்ள மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட ராமகிருஷ்ணா 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Loading More post
பாஜகவில் இணைந்த புதுவை முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் அமித்ஷாவுடன் சந்திப்பு
கங்குலிக்கு இரண்டாவது முறையாக ஆஞ்சியோ சிகிச்சை!
"சசிகலா பூரண குணமடைய வேண்டும்" - ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப்
குடியரசு தின அணிவகுப்பு: உ.பி.-யின் ராமர் கோயில் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு!
பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த மாரி செல்வராஜ் - அதிகாரபூர்வ அறிவிப்பு
'முன் எப்போதும் இல்லாத' பட்ஜெட் 2021-ல் சாமானிய மக்களின் தேவைகள் என்னென்ன?!
திரையும் தேர்தலும் 3 - அண்ணா எழுத்தில் 'வேலைக்காரி'... புதுப்பாதை தொடங்கிய புள்ளி!
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?