தனது அரசியல் பயணம் குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என விஜய் பலமுறை கூறியும் தனது கணவர் கேட்கவில்லை என விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் “அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் சமூக தொண்டாற்றி வருகிறார். அரசியலுக்கு வரவேண்டும் என விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து போஸ்டர்கள் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து “அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர், கட்சி பெயர் ஒன்றை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதனைக் கேள்விப்பட்ட நடிகர் விஜய் அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்புமில்லை. அந்தக் கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகளில் தனது பெயர் ஈடுபடுத்தப்படுமானால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உங்களுக்கும் விஜய்க்கும் 5 ஆண்டுகளுக்கும் மேல் பேச்சு வார்த்தை இல்லை என்பது குறித்தான கேள்வியை முன்வைத்த போது “சிலரின் கற்பனைக்கெல்லாம் நான் விளக்கம் கூற முடியாது. நாங்கள் கொரோனா காலங்களில் கூட பல முறை சந்தித்து பேசினோம்.” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது அரசியல் பயணம் குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என விஜய் பலமுறை கூறியும் தனது கணவர் கேட்கவில்லை என விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், “அசோஷியன் என்ற பெயரில் முதலிடம் எஸ்.ஏ.சி என்னிடம் கையெழுத்து வாங்கினார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அவர் கட்சி என்ற பெயரில் கையெழுத்து கேட்டபோது நான் போட மறுத்துவிட்டேன். விஜய்க்கு தெரியாமல் நீங்கள் செய்யும் காரியங்களில் நான் ஈடுபடமாட்டேன் என்று கூறிவிட்டேன். அந்த கட்சியில் நான் இல்லை. விலகிவிட்டேன். என்னுடைய அரசியல் குறித்து பொதுவெளியில் பேசாதீர்கள் என்று விஜய் பலமுறை எஸ்.ஏ.சியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அதை கேட்கவே இல்லை. தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் விஜய் அவரிடம் பேசுவதில்லை. விஜய்யின் அரசியல் குறித்து விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Loading More post
ஆபத்தான முன்னுதாரணம்!- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு
’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!