கரைய வைக்கும் இசை.. வெளியானது சூரரைப் போற்றுவின் ”நாலு நிமிஷம்” பாடலின் லிரிக் வீடியோ.!

Soorarai-Pottru--Naalu-Nimisham-Lyric-video

 


Advertisement

சூரரைப் போற்று படத்தில் இருந்து  “நாலு நிமிஷம்” என்ற சோகமான பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

image


Advertisement

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஊர்வசி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், படம் தொடர்பான ப்ரோமா வீடியோக்கள், மேக்கிங் வீடியோக்கள் படக்குழுவால் வெளியிடப்பட்டு வருகிறது.


Advertisement

அந்த வகையில் தற்போது படத்தில் இருந்து ஒரு “நாலு நிமிஷம்” என்ற சோகமான பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடலின் நடுவே படம் தொடர்பான மேக்கிங் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement