டெல்லியில் மது அருந்தும்போது ஸ்நாக்ஸ் வாங்கிவர மறுத்த சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் மதன்பூர் கதார் பகுதியைச் சேர்ந்தவர் தினக்கூலி வேலை செய்பவரின் மகன் அல்காஸ்(14 வயது). இவர் புதன்கிழமை மாலை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அங்கு ஷதாப் என்கிற பல்சர் என்ற நபர் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்திருக்கிறார். அவர் அல்காஸை அழைத்து ஸ்நாக்ஸ் வாங்கிவரச் சொல்லியிருக்கிறார். சிறுவன் அதற்கு மறுக்கவே ஆத்திரமடைந்த ஷதாப் சிறுவனைக் கத்தியால் பலமுறை குத்தியிருக்கிறார்.
இதுகுறித்து மாலை 4.52 க்கு கலிந்தி குன்ஜ் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீஸார் சிறுவனை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால் செல்லும்வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனையில் சிறுவனின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
சிறுவன் சாலையில் சென்றுகொண்டிருந்திருக்கிறான். ஷதாப் சிறுவனை தடுத்து ஸ்நாக்ஸ் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். சிறுவன் மறுக்கவே முதலில் கன்னத்தில் அறைந்திருக்கிறான். சிறுவன் உதவிக்காக சத்தம் போட்டவுடன் அவனை பலமுறை கத்தியால் குத்தியதாக நேரில் பார்த்தவர் கூறியிருக்கிறார். அவர் கொடுத்த அறிக்கையின்படி ஷதாபை போலீஸார் கைது செய்துள்ளனர்.
30 சதுர அடி அறையில் அடைத்து வைக்கப்பட்ட 164 நாய்கள்..!
மேலும் அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக துணை ஆணையர் ஆர்.பி.மீனா தெரிவித்துள்ளார். மேலும் அருகிலுள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் சிறுவனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீஸார் சிறுவனின் குடும்பத்தாரிடம் சமாதானம் பேசி போராட்டத்தை கைவிட செய்தனர்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி