ரசிகரின் மறைவு: உருக்கமுடன் இரங்கல் தெரிவித்த தனுஷ்!

Fan-death--Dhanush-mourns-with-grief

தனது ரசிகரின் மறைவிற்கு நடிகர் தனுஷ் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து உருக்கமுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்


Advertisement

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர்,பாடகர், இயக்குநர் என பன்முகத் திறமைகளால் தமிழ் சினிமாவை தெறிக்கவிடும் நடிப்பு ’அசுரன்’ தனுஷ். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில்தான் அறிமுகமானார். காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை, ஆடுகளம் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து தமிழின் முன்னனி நடிகரானார்.  இதனால், தனுஷிற்கு ரசிகர்களும் ரசிகர் மன்றங்களும் உருவாகின. தமிழ் மட்டுமல்லாமல் இந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார்.

 


Advertisement

image

இதனால், இந்தியா முழுவதும் தனுஷிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.  ட்விட்டரில் மட்டுமே 9 மில்லியன் ஃபாலோயர்ஸ் பின் தொடர்கிறார்கள். தனுஷும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அதோடு, தனுஷ் ரசிகர் மன்றமும் தனுஷ் அப்டேட்ஸ்களை உடனுக்குடன் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், தனுஷின் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் செயலாளர் தினேஷ்குமார் உடல் நலக்குறைவால் மறைந்ததையொட்டி நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஈரோடு மாவட்ட எனது நண்பர்கள் நற்பணி மன்றத்தின் செயலாளராக சிறப்பாக பணியாற்றிய திரு.தினேஷ்குமார் உடல்நல குறைவினால் இன்று மறைந்தார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement