யஷ் பிறந்தநாளில் வெளியாகும் ’கே.ஜி.எஃப் 2’ டீசர்: அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

KGF-2-Teaser-Released-On-Yash-Birthday--Updated-Producer-

இந்தியா முழுக்க வசூல் சாதனை செய்த ’கே.ஜி.எஃப் 2’ படத்தின் டீசர் நடிகர் யஷ் பிறந்த நாளான ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகும் என்று, அப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கெளடா மறைமுகமாக ட்விட்டர் கேள்வி பதிலில் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.


Advertisement

 கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான   ‘கே.ஜி.எஃப்’  இந்தியா முழுக்க வசூல் சாதனை செய்ததால், அதன் இரண்டாம் பாகத்தை அறிவித்தது படக்குழு.

image


Advertisement

சஞ்சை தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 இந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால்,  படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. சமீபத்தில் ஷூட்டிங் நடத்த மத்திய அரசு விதிமுறைகளைத் தளர்த்தியதால், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் கே.ஜி.எஃப் 2 படத்தின் ஷூட்டிங் தொடர்ந்தது. அதில், பிரகாஷ் ராஜின் பகுதிகள் எடுக்கப்பட்டன. தற்போது, யஷ் மற்றும் சஞ்சய் தத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படத்தின் இறுதிக்கட்டக் காட்சிகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்படவுள்ளது.

 


Advertisement

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கெளடாவிடம், யஷ் ரசிகர் ஒருவர், ‘படப்பிடிப்பு முடிந்துவிட்டதா? டீசர் எப்போது வெளியாகும்?’ என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள கார்த்திக் கெளடா

“டீசரை இப்போதே வெளியிட்டால், நீங்கள் மற்றொரு அப்டேட்டைக் கேட்பீர்கள். அதனால், யஷ் பிறந்தநாளில் ஒரு அப்டேட் கொடுப்போம்” என்று சூசகமாக பதிலளித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement