‘சரி என்கிறார் கிரண் பேடி; தவறு என்கிறார் நாராயணசாமி’: தொடரும் புதுச்சேரி பிரச்னை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

நியமன எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது தொடர்பான கோப்பை சபாநாயகர் திருப்பி அனுப்பியதை ஏற்க முடியாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

யூனியன் பிரதேச மாநிலத்தில், நியமன எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு உள்ளது எனவும், புதுச்சேரி மாநில அரசு அதனை ஏற்க மறுப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.


Advertisement

புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த மூன்று பேருக்கு ஆளுநர் கிரண் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  கிரண் பேடிக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் உசுடு சட்டமன்றத்திற்கு உட்பட்ட பத்துக்கண்ணு பகுதியில் ஆளுநர் கிரண் பேடியை கண்டித்தும், புதுச்சேரியை விட்டு அவர் உடனடியாக வெளியேற வலியுறுத்தியும் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று கிரண் பேடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி மூன்று நியமன உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஆளுநருக்கோ, மத்திய அரசுக்கோ அதிகாரம் இல்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. இந்நிலையில் ஆளுநர் பாஜகவைச் சேர்ந்த மூன்று பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது மக்களை அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் பொதுமக்களின் எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியவுடன் மூன்று நியமன உறுப்பினர்களை தான் பரிந்துரை செய்யவில்லை என பின்வாங்குவதாகவும் நாராயணசாமி குற்றச்சாட்டினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement