சுதா கொங்கரா இயக்கத்தில் ஒன்றாக நடிக்க விருப்பம் தெரிவித்த மாதவன், சூர்யா!

Madhavan-Surya-wants-to-act-together-in-Sudha-Kongara

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒன்றாக நடிக்க, நடிகர் மாதவனும் சூர்யாவும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.


Advertisement

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுதா கொங்கரா கல்லூரி படிப்பை படித்ததெல்லாம் தமிழகத்தில்தான். சினிமா மீதான காதலால், இயக்குநர் மணிரத்னத்திடம் 7 ஆண்டுகள் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுதா கொங்கரா, கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான துரோகி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

image


Advertisement

ஆனால்,அவரை முன்னணி இயக்குநராக்கியது 2016 ஆம் ஆண்டு மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ‘இறுதிச்சுற்று’ படம்தான். இப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக ரித்திகா சிங்கிற்கு சிறப்பு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 

image


Advertisement

இந்நிலையில், சுதா கொங்கரா தனது அடுத்தப் படமாக சூரரைப் போற்று படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு சூர்யா, சுதா கொங்கரா,ஜி.வி பிரகாஷ் கூட்டாக அளித்தப் பேட்டியில் ‘மாதவன், சூர்யா இருவரையும் இயக்கிவிட்டீர்கள். இருவரையும் ஒன்றாக இயக்க வாய்ப்பிருக்கிறதா?’ என்று சுதா கொங்கராவிடம் கேட்கப்பட்டக் கேள்விக்கு பதிலளித்துள்ள சுதா கொங்கரா “இருவரையும் இயக்க ஆவலோடு இருக்கிறேன். கிரேட் ஐடியா. ஆனால், ஸ்கிரிப்ட் மாட்டனுமே?’ என்று என்கிறார்.

 

அதற்கு, சிரித்தபடியே ’எழுதுங்க.. எழுதுங்க.. என்கிறார் சூர்யா. இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் மாதவன் “யெஸ்.. யெஸ்… சீக்கிரமா எழுதுங்க” என்று ரீட்விட் செய்து உற்சாகப்படுத்தி இருக்கிறார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement