[X] Close >

ஜாலியாக 'செல்ஃபி' எடுத்தபோது விபரீதம்... பள்ளத்தாக்கில் தவறி விழுந்து இளம்பெண் பலி

Woman-Dies-After-Falling-Into-Valley-While-Taking-Selfie
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் வசித்துவந்த நீது மகேஸ்வரி என்ற 30 வயதான இளம்பெண், தனது குடும்பத்தினருடன் ஜாம் கேட் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். மலைகள் நிறைந்த இப்பகுதியில் ஆங்காங்கே நின்று ஜாலியாக செல்ஃபி எடுத்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் ஒரு பள்ளத்தாக்கின் முனையில் நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது திடீரென்று தவறி விழுந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள், நான்கு மணி நேர தேடுதலுக்குப் பின் பள்ளத்தாக்கில் இருந்து நீது மகேஸ்வரி சடலமாக மீட்டுக்கொண்டு வந்தனர். 
 
இதனால் நீது மகேஸ்வரி குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close