தலை விடுதலை... யூடியுப்பில் அதிரவைக்கும் விவேகம் பாடல்!

தலை விடுதலை... யூடியுப்பில் அதிரவைக்கும் விவேகம் பாடல்!
தலை விடுதலை... யூடியுப்பில் அதிரவைக்கும் விவேகம் பாடல்!

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விவேகம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் நேற்று வெளியாகி வைரலானது. இந்நிலையில் அப்பாடலின் முழு வரிகளும் இன்று மாலை ஆறுமணிக்கு  யூடியுப்பில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. வெளியான ஒரு மணி நேரத்தில் 1 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதிமானோர் பார்வையிட்டுள்ளனர். ’தலை விடுதலை விழிகளில் பாருடா.. பகை பதறிட கதறிட போரடா.. தடை சிதறிட உதைபட ஏறடா.. விடை வீரமே உலகெல்லாம் கூறடா’ என்ற இப்பாடலை இயக்குநர் சிவா எழுதியுள்ளார். வினய், அனந்து, ஸ்ரீனிவாஸ் ஹரிஷ் ஆகியோர் பாடியுள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே யூடியூப் வலைதளத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. சில வாரங்களுக்கு முன் வெளியான சர்வைவா பாடல் சிங்கிள் ட்ராக், மற்றும் முழுப்பாடல் வரிகள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தலை விடுதலை பாடலும் ட்ரெண்டாகி வருகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com