பட்டப்பகலில் நடிகையின் நிர்வாணப் பட சூட்டிங்... கொந்தளித்த மக்கள் : கோவாவில் நடந்தது என்ன?

Uproar-in-Goa-over-Poonam-Pandey-nude-video-shoot--FIR-filed

கோவாவில் உள்ள சபோலி அணையில் நிர்வாண நிலையில் ஆபாச படம் எடுத்ததாக நடிகை பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பை தடுக்காததால் கனகோனா காவல் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

image

பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகை பூனம் பாண்டே தற்போது புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் கோவா மாநிலம் கனகோனாவில் உள்ள சபோலி அணையில் நிர்வாண நிலையில் ஆபாச படம் எடுத்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியால் கோவா மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் நேற்று கனகோனா பகுதி மக்கள் துணை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்த படப்பிடிப்பை தடுக்காத கனகோனா காவல் ஆய்வாளர் துக்காராம் சவானை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தினார்கள். அவர் மீது நடவடிக்கை இல்லை என்றால் பந்த் நடத்துவோம் என்றும் அறிவித்தனர்.


Advertisement

பட்டப்பகலில் எடுக்கப்பட்ட இந்த ஆபாச வீடியோ படப்பிடிப்பை தடுக்க தவறியதற்காகவும், சம்மந்தப்பட்ட நபர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய தாமதப்படுத்தியதற்காவும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் கோவாவின் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட்ட பூனம்பாண்டே மற்றும் படக்குழுமீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

image

மாடல் பூனம் பாண்டேவின் அரை நிர்வாண போட்டோஷூட்டை நீர்த்தேக்கத்தில் அனுமதித்ததற்காக தற்போது கனகோனா போலீஸ் இன்ஸ்பெக்டர் துக்காராம் சவான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆபாச வீடியோ குறித்து பூனம் பாண்டேவிடம் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement