''அடுத்த ஐபிஎல் தொடரின்போது கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும், அதனால் இந்தியாவிலேயே நடத்த முடியும்'' – கங்குலி
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’க்கு அளித்த பேட்டியில், ஐபிஎல் தொடரின் அடுத்த பதிப்பு ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் மறு சீரமைப்பை செய்ய விரும்பும் சூழ்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன் முழு அளவிலான ஏலம் நடைபெறுமா என்பது குறித்து கேட்டதற்கு, “நாங்கள் இதுவரை எதையும் முடிவு செய்யவில்லை. இந்த சீசன் முடிவடையட்டும். ஏலம் குறித்து பிசிசிஐ ஆலோசித்து அழைப்பு விடுக்கும்” என்றார் கங்குலி.
'அடுத்த ஐபிஎல் தொடரின் போது நிச்சயமாக கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும், அதனால் இந்தியாவிலேயே ஐபிஎல் தொடரை நடத்த முடியும்' என்றும் கங்குலி தெரிவித்தார்.
முன்னதாக கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான இறுதி லீக் ஆட்டத்திற்குப் பிறகு தோனி பேசும்போது, "அடுத்த 10 ஆண்டுகளை கவனத்தில் வைத்து நாங்கள் எங்கள் அணியை சற்று மாற்றியமைக்க வேண்டும். அனைத்தும் பிசிசிஐயின் முடிவை பொறுத்தே உள்ளது. இது ஒரு கடினமான ஆண்டு. பெரும்பாலான அணிகள் சிறப்பாக விளையாடிய சீசன்களில் இதுவும் ஒன்றாகும்” என்று கூறியிருந்தார்.
Loading More post
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
கரூர்: ராகுல் காந்திக்கு பழைய 500 ரூபாய் நோட்டை கொடுத்த விவசாயி!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்