[X] Close >

இந்திய அணியின் பயிற்சியாளர் அறிவிப்பில் தாமதம்

Announcement-of-Indian-coach-delayed

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அடுத்த ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார் என்று பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் சவுரவ் கங்குலி தெரிவித்தார். 


Advertisement

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, பயிற்சியாளருக்கான நேர்காணல் முடிவடைந்ததாகவும், இதுதொடர்பாக கேப்டன் விராத் கோலியிடம் ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் விராத் கோலியின் கருத்து மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்ட கங்குலி, வெஸ்ட் இண்டீஸில் இருந்து அவர் திரும்பியவுடன் கலந்தாலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார். பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு அடுத்த ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் கங்குலி குறிப்பிட்டார். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு யாருடைய பெயரையும் விராத் கோலி பரிந்துரைக்கவில்லை என்றும் கங்குலி தெரிவித்தார். இதனிடையே, பயிற்சியாளர் பதவிக்கான ரேஸில் ரவி சாஸ்திரி மற்றும் சேவாக் ஆகியோர் மற்றவர்களை விட முந்தி நிற்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close