ராமேஸ்வரம் கோயிலில் நகைகள் எடை தொடர்பான விஷயத்தில் கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி கோயிலின் இணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘’ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் நகைகளில் எடை குறைவு ஏற்பட்டதாக திருக்கோயில் பணியாளர்களிடம் விளக்கம் கோரப்பட்டது குறித்து 03.11.2020, 04.11.2020 ஆகிய நாட்களில் பல்வேறு நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டது. அதனையடுத்து சமூக ஊடகங்களில் இது குறித்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இத்திருக்கோயிலின் 1978-ல் நகைகள் மற்றும் விலையுயர்ந்தவைகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. பின்னர் தற்பொழுது சிவகங்கை துணை ஆணையர்/ நகை சரிபார்ப்பு அலுவலரால் 29.01.2019 முதல் 07.03.2019 முடிய இத்திருக்கோயிலின் நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு மறு மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்டது.
40 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற மதிப்பீட்டில் பயன்பாட்டில் இருந்த மொத்த 215 இனங்களில் தேய்மானம் காரணமாக எடை குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, 18 பொன் இனங்களில் சுமார் 68 கிராம் எடை குறைவுக்கான தொகை ரூ 2,11,790 எனவும், 14 பொன் இனங்களில் சிறு சிறு பழுது ஏற்பட்டுள்ளதற்கான மதிப்பு ரூ 2,454 எனவும் தெரிவித்து ஆக கூடுதல் ரூ 2,14,244/ -எனவும்
வெள்ளி இனங்களில் பயன்பாட்டில் இருந்த மொத்தம் 344 இனங்களில் 42 இனங்களில் 25,811 கிராம் தேய்மானத்தின் அடிப்படையிலான எடை குறைவுக்கான தொகை ரூ 10,93,340 எனவும் மதிப்பீடு செய்யப்பட்டு வெள்ளி இனங்களில் தங்கம் முலாம் பூசப்பட்ட இனங்களில் 43 கிராம் 700 மில்லிகிராம் எடை குறைவிற்கான மதிப்பு ரூ .1,35,670/-ஆக கூடுதல் வெள்ளி இனங்களில் மொத்தம் ரூ .12,29,010/-இழப்பு எனவும் மதிப்பீடு செய்யப்பட்டு அந்த பொருட்களை பொறுப்பில் வைத்திருந்த பணியாளர்களிடமிருந்து வசூல் செய்யலாம் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க வெள்ளி இனங்களில் அனைத்து இனங்களும் சரியாக உள்ளது. கடந்த மறு மதிப்பீட்டிற்கும் தற்போதைய மறு மதிப்பீட்டிற்கும் இடையே 40 ஆண்டுகள் இடைவெளி உள்ள நிலையில் ஏற்கனவே இந்த 40 ஆண்டு காலத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் 13 பேர், விருப்ப ஓய்வு 2 நபர்கள், தற்போது பணியில் உள்ளவர்கள் 32 பேர் ஆகமொத்தம் 47 என பணியாற்றி உள்ளவர்களுக்கு நாற்பதாண்டு கால பயன்பாடு காரணமாக தேய்மானம் ஏற்பட்டு அதற்கான எடை குறைவுக்கான இழப்பினை ஏன் தங்களிடமிருந்து வசூல் செய்யக்கூடாது என விளக்கம்கோரி தொடர்புடைய பணியாளர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது.
இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை. முறைகேடுகள் ஏதும் நடைபெற்றதாக மேற்படி மதிப்பீட்டு அறிக்கையிலோ திருக்கோயில் பணியாளர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பிலோ தெரிவிக்கப்படவில்லை. இதற்காக பொது மக்களோ பக்தர்களோ திருக்கோயில் நகைகளின் பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ‘’
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தலாமா? - மருத்துவர் தரும் விளக்கம்
வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்: கே.எஸ்.அழகிரி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு; கையெழுத்தானது ஒப்பந்தம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!