பொம்மை சுற்றுவது போலவே, தானும் தரையில் சுற்றும் சுட்டிக் குழந்தை: வைரல் வீடியோ

Like-a-toy-spinning--the-child-spins-on-the-floor--viral-video

தனது பொம்மை சுற்றுவதைப் பார்த்துவிட்டு குழந்தையும் குதூகலித்து சுற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.


Advertisement

பொம்மை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும், குழந்தைகளுக்கு பெற்றோர்களுக்கு அடுத்து பிடித்த ஒரு விஷயம் என்றால், அது பொம்மைகள்தான். தன் பேச்சைக் கேட்கும் ஒரு நண்பன் கிடைத்துவிட்டது போலவே நினைத்துக்கொண்டு எப்போதும் பொம்மையுடனேயே குழந்தைகள் விளையாடி மகிழும். பொம்மையை யாராவது பிடுங்கிவிட்டால் அழுது அடம் பிடிப்பது மட்டுமல்ல. தரையில் உருண்டு புரண்டுவிடும்.

image


Advertisement

 சில வீடுகளில் பொம்மைகளைக் காட்டித்தான் உணவே ஊட்டுவார்கள். குழந்தைகளுக்கும் பொம்மைகளுக்கும் அப்படியொரு பாசப்பிணைப்பு. அப்படித்தான், the feel good page என்ற ட்விட்டர் பக்கத்தில் அமர்ந்துகொண்டிருக்கும் குழந்தை ஒன்று எதிரே அமர வைத்துள்ள பொம்மையை உற்று பார்த்துக்கொண்டிருக்கிறது.

 


Advertisement

அந்தப் சுழலும் அந்தப் பொம்மை சிறிது நேரம் விட்டு விட்டு தரையை அமர்ந்துகொண்டே சுற்றுகிறது.  குழந்தையும் அதனைப் பார்த்துவிட்டு பொம்மையைப்போலவே உட்கார்ந்து கொண்டே ரவுண்டாக சுற்றுகிறது. பொம்மை சுற்றுவதை நிறுத்தினால் குழந்தையும் சுற்றுவதை நிறுத்தி விடுகிறது.எப்படிப்பட்ட கவலையையும் மறக்கச்செய்யும் இந்த வீடியோவை பலரும் பகிருந்து வருகிறார்கள்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement